விஜய் எனக்கு போன் பண்ணி பேசினார்!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா விஜய் சேதுபதி...

Vijay Vijay Sethupathi Gossip Today jason sanjay Bigg Boss 10 Tamil
By Jai Sep 19, 2026 07:15 AM GMT
Report

விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள பத்தா படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அதே நாளில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்மா படமும் ரிலீஸாகவுள்ளது. 2 படங்களில் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் ஒரே நாளில் நடந்தது.

விஜய் எனக்கு போன் பண்ணி பேசினார்!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா விஜய் சேதுபதி... | Vijay Sethupathi End To Controversy Vijay Called

அப்போது விஜய் சேதுபதி, விஜய் பற்றி பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம், விஜய் சேதுபதி பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் லீடர்ஷிப் பற்றி பேசியது தான். மேடையில் விஜய் சேதுபதி இருக்கும் போது விஜய் போட்டோ ஸ்கிரீனில் போடப்பட்டது.

விஜய் எனக்கு போன்

அப்போது அவர், விஜய் எனக்கு ரொம்ப பிடிக்கும், சர்கார் படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது ஜேசன் சஞ்சய் பிறந்தநாளுக்கு நான் வாழ்த்து சொன்னேன். உடனே அவர் எனக்கு போன் செய்து, நீங்க வாழ்த்து சொன்னதை கேட்டு ஜேசன் ரொம்ப சந்தோஷப்பட்டான் என்று சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ரொம்ப நேரம் அன்னைக்கு பேசினோம். அதன்பின் நான் ஜேசனுக்கு போன் செய்து, எப்படி டா என்னை உனக்கு பிடிச்சிச்சு? உங்க வீட்டில் ஒரு பெரிய ஆளை வச்சிருக்க என்று கேட்டேன்.

விஜய் எனக்கு போன் பண்ணி பேசினார்!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா விஜய் சேதுபதி... | Vijay Sethupathi End To Controversy Vijay Called

அதற்கு அவனும் சிரித்தபடியே பேசிக்கொண்டு இருந்தான். அதுபோல் இன்று ஜேசன் இயக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்குது, எனக்கு சந்தோஷம் தான். அப்படத்தை அவர் இயக்கிக் கொண்டிருக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே போய் பார்க்க போயிருந்தேன். அங்கு ஒரு மணி நேரம் ஜேசனிடம் பேசிட்டு வந்தேன்.

அந்த சமயத்தில் ஜனநாயகன் படத்தில் என் கூட இருக்கிற ஒருவர் நடித்துக் கொண்டிருந்தார். அவர் விஜய் சார் கிட்ட போய் சொல்லி இருக்கிறார். அப்போ அவர் இறுக்கமாக கட்டிப்பிடித்து இதை விஜய் சேதுபதிக்கு கொடுத்திடு என்று சொல்லி அனுப்பி இருக்ல்கிறார். இப்படித்தான் எங்களுக்குள்ள பழக்கம் இருக்கு என்று விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.