பைனலில் போட்டியாளர் ஒருவரை அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி..கொந்தளிக்கும் ரசிகர்கள்
பிக் பாஸ்
கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் அவர் திடீரென வெளியேறியதால் இந்த சீசன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
விஜய் சேதுபதி மீது ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதாவது, சில போட்டியாளர்களுக்கு ஆதரவாக பேசுகிறார், சில போட்டியாளர்களை பேசவே விடுவதில்லை என பலரும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
பிக் பாஸ் 8ம் சீசன் நேற்றோடு நிறைவு பெற்றது. பைனலில் 5 போட்டியாளர்கள் இருந்த நிலையில் டைட்டிலை முத்துக்குமரன் ஜெயித்தார்.
அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி
அந்த பைனலில் இதற்கு முன் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வந்திருந்தனர். அவர்களிடம் விஜய் சேதுபதி பேசும்போது, 'நீங்கள் வெளியில் சென்று என்னவெல்லாம் செய்தீர்கள் என சொல்லுங்க' என்று கேட்டார்.
அப்போது பேசிய ராணவ், "பிக் பாஸ் எனக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்து இருக்கிறது. அதுவும் நீங்கள் host ஆக இருக்கும் ஷோவில் தொடங்கி இருக்கிறது" என பேசிக்கொண்டிருந்தார்.
அதில் குறுக்கிட்ட விஜய் சேதுபதி, 'இது சுத்த பொய்.. சுத்த பொய்' என சொல்லி பிரேக் விட்டுவிட்டு கிளம்பிவிட்டார்.
மேலும் ”வருங்காலத்தில் உங்கள் உடன் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஒரு நிலை வந்தால், அந்த படமே வேண்டாம் என போய்விடுவேன்” என கூறி விஜய் சேதுபதி அசிங்கப்படுத்தி இருக்கிறார்.
விஜய் சேதுபதி ராணவ்வை தொடர்ந்து அசிங்கப்படுத்தி வருகிறார் என பிரபல நடிகை சனம் ஷெட்டி தற்போது கோபமாக இன்ஸ்டாவில் பதிவை வெளியிட்டுள்ளார்.