வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் விஜய் சேதுபதி.. இதோ நீங்களே பாருங்க
விஜய் சேதுபதி
ஹீரோ, வில்லன் என தமிழ் சினிமாவில் மிரட்டி வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஹிட் கொடுத்திருந்தாலும், வில்லனாக தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக மகாராஜா, விடுதலை 2 ஆகிய படங்கள் தமிழில் வெளிவரவுள்ளது. அதே போல் ஹிந்தியில் மெரி கிறிஸ்துமஸ் எனும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் உடன் இணைந்து நடித்துள்ளார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒவ்வொரு படத்திற்கு மெனக்கெட்டு அந்த கதாபத்திற்காக உருவத்தை அல்லது குணாதிசயங்களை மாற்றி கொண்டு நடிப்பார். அதை நாம் பல திரைப்படங்களை பார்த்து இருக்கிறோம்.
புதிய லுக்
இந்நிலையில், தற்போது மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்காக வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும், எம்.ஆர். ராதா போல் இருக்கிறார் விஜய் சேதுபதி என கூறி வருகிறார்கள். மேலும் சிலர் ஜெய் ஷங்கர், நாஞ்சில் சம்பத் போல் விஜய் சேதுபதி தெரிகிறார் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..