சரக்கு அடிச்சுட்டு போதையில் அவரிடம் இதை செய்ததில்லை!! நடிகர் விஜய் சேதுபதி ஓப்பன்..
தமிழ் சினிமாவின் மக்கள் செல்வம் என்று புகழப்பட்டு வருபவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த விடுதலை படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை மக்களிடம் பெற்று வருகிறது.
இந்நிலையில், விடுதலை படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, வெற்றிமாறன் குறித்து பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.
அவரின் உணர்வுகளை வைத்து தான் புரிந்து கொண்டு நடிப்பேன் என்றும் அவரின் சிந்தனையில் இருந்து தான் இந்த படத்தின் பெருவெடிப்பு துவங்கியது எனவும் கூறியுள்ளார்.

மேலும், நல்லவேளை நான் பெண்ணாக பிறக்கவில்லை. அப்படி பிறந்திருந்தால் அவரை உசார் செய்திருப்பேன் என்று இப்போது கூட அவரை பார்த்து பேசமுடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
நான் ஒருவேலை சரக்கு அடித்து போதையில் இருந்தால் கூட அவரிடம் மரியாதையாக தான் பேசுவேன்.
மரியாதை நிலை தவறியதே இல்லை என்றும் நான் எந்த சிந்தனை நிலையில் இருந்தாலும் தடுமாறாமல் மரியாதையுடன் அவரிடம் பேசுவேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.