தனுஷை கலாய்க்க எனக்கு தேவையில்லாத ஒன்று? கோபத்தில் பேசிய விஜய் சேதுபதி..

Dhanush Vijay Sethupathi
By Edward Jul 02, 2022 02:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரம் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் நடிகர் விஜய் சேதுபதி. பெயரிடப்படாத பல படங்களில் சிறு ரோல்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம், பிட்சா, தென்மேற்கு பருவ காற்று, சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி போன்ற வெற்றி படங்கள் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் விஜய் சேதுபதி.

மக்கள் செல்வன்

இதையடுத்து ஒரு வருடத்தில் 5 படங்களுக்கும் மேல் நடிக்க ஆரம்பித்த விஜய் சேதுபதி கடந்த ஆண்டு மட்டும் 10 படங்கள் வெளியாகியது. அதில் பல படங்கள் தோல்வியை சந்தித்தது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தது. சினிமா நட்சத்திரங்களுக்கு இடையில் சில போட்டிகள் இருக்கும்.இதனை ரசிகர்கள் பெரியளவில் சண்டையிட்டு இணையத்தில் பேசி வருவார்கள்.

தனுஷை கலாய்க்க எனக்கு தேவையில்லாத ஒன்று? கோபத்தில் பேசிய விஜய் சேதுபதி.. | Vijay Sethupathi Talks In Detail About His Career

தனுஷ் விஜய் சேதுபதி பிரச்சனை

அந்தவகையில் தனுஷ், விஜய் சேதுபதி ரசிகர்களிடையே மிகப்பெரிய சண்டை சில வருடங்களுக்கு முன் தோன்றியது. அதற்கு காரணம், ஜுங்கா படத்தில் போயட்ரி தினேஷ் என்ற பெயரை வைத்து ஒரு கதாபாத்திரம் இருக்கும்.

அதனால் ஏற்கனவே தனுஷுக்கு போயட்ரி என்ற அடைப்பெயர் இருக்கிறது என்பதால் தனுஷை அசிங்கப்படுத்தினார் விஜய் சேதுபதி என்ற விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து விஜய் சேதுபதி அளித்த பேட்டியொன்றில், போயட்ரி என்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

அவரை கலாய்க்க எங்களுக்கு அவசியம் இல்லை தேவையில்லாத ஒன்று என்றும் சினிமாவில் இருக்கும் சக கலைஞர்களை நாங்கள் எப்படி பேச முடியும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.