ரீ-ரிலீஸ் ஆகும் விஜய் சேதுபதி-த்ரிஷாவின் 96 திரைப்படம்... தேதி விவரம்...
96 படம்
கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ம் தேதி வெளியான திரைப்படம் 96.
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
நடிகர்கள், கதையை தாண்டி கோவிந்த் வசந்தா இசையமைப்பில் இப்படத்தில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் செம ஹிட்.
காதலர்கள் ஒன்றாக இணையும் படங்களை விட பிரிந்த காதலர்கள் படங்கள் தமிழ் சினிமாவில் நிறைய ஹிட்டடித்துள்ளன, அதில் ஒரு படமாக விஜய் சேதுபதியின் 96 படம் உள்ளது.

ரீ-ரிலீஸ்
தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான ஹிட் படங்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகி வருகிறது.
அந்த வரிசையில் 96 படமும் இடம்பெற்றுள்ளது, இப்படம் மீண்டும் ரிலீஸ் ஆகவுள்ளதாம். படம் வெளியாகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில் வரும் அக்டோபர் 9ம் தேதி 96 படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
