2 காதலி 3 பொண்டாட்டி!! வாழ்ந்தா விஜய் சேதுபதி மாதிரி வாழணும்...
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் படம் விக்ரம். இப்படத்தில் விஜய்சேதுபதி, பகத்பாசில், காயத்ரி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் நடிகர் சூர்யா கிளைமேக்ஸில் 3 நிமிட காட்சியில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். இன்று வரை 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது விக்ரம் படம். விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்காக மூன்று நடிகைகளை லோகேஷ் கனகராஜ் இறக்கி இருப்பார்.
ஷிவானி நாராயணன், விஜே மகேஷ்வரி, மைனா நந்தினி என மூவரும் விஜய் சேதுபதியின் மனைவிகளாக நடித்திருப்பார்கள். இதனை பலர் இணையத்தில் மீம்ஸ்களை போட்டு விஜய் சேதுபதியை கலாய்த்தும் வருகிறார்கள்.
அதில் ஒரு மீமில் கண்மணி, கதீஜாவை கழட்டிவிட்டு விட்டு மூன்று கல்யாணத்தை பண்ணிட்டாரே என்றும் காத்துவாக்குல மூன்று திருமணம் என்று கலாய்த்து வருகிறார்கள். இதனை விஜே மகேஷ்வரி அவரது இன்ஸ்டாகிரம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
ரெண்டே படம் தான் நயன் தாரா, சமந்தா, ஷிவானி, நந்தினி, மகேஷ்வரின்னு 5 ஹீரோயின் அமைவது சமீபத்தில் விஜய் சேதுபதிக்கு தான் என்றும் கிண்டல் செய்து மீம் புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.

