தளபதி விஜய் தங்கை புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சியடைந்த தந்தை! வைரலாகும் புகைப்படம்

Vijay
By Edward May 20, 2022 04:10 PM GMT
Report

தமிழ்சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் எஸ் ஏ சந்திரசேகர். அவள் ஒரு பச்சை குழந்தை என்ற படத்தில் ஆரம்பித்து தற்போது இயக்கி வரும் நான் கடவுள் இல்லை என்ற படம் வரை நல்ல படங்களை கொடுத்து வருகிறார்.

அதிலும் தன்னுடைய மகன் விஜய்யை நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின், ரசிகன், விஷ்ணு, ஒன்ஸ்மோர், மாண்புமிகு மாணவன் உள்ளிட்ட படங்களையும் இயக்கி முன்னணி நடிகராக்க பாடுபட்டார்.

அதன்பின் விஜய்க்கு முக்கிய படமாக அமைந்த தமிழன் படத்தில் ஸ்கிரின் பிளேவும் செய்திருந்தார். விஜய் இந்த அளவிற்கு உச்சத்தை தொட குருவாகவும் எஸ் ஏ சந்திரசேகர் உழைத்திருக்கிறார்.

இந்நிலையில் தன் மகன் பெற்றோர்களை மாதம் ஒருமுறை வந்து பார்த்து ஆசை தீர பேசினால் போதும் என்ற கோரிக்கையும் வைத்திருந்தது சர்ச்சையாகியது. அதேபோல் விஜய் பற்றிய சில ரகசிய செய்திகளையும் கூறி பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய மகளும் விஜய்யின் தங்கையுமான வித்யா சாந்திர சேகர் மரணித்து 37 வருடங்களாகியதை நினைவு கூற , என் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று மே-20 என்று பதிவிட்டு சிறு வயதில் விஜய், வித்யா இருவரும் இணைந்து அப்பாவிற்கு கொடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் விஜய், சுக்ரன் படத்தில் தன் தங்கையின் புகைப்படத்தை பதிவு செய்திருந்ததையும் பகிர்ந்து வருகிறார்கள்.

Gallery