4 நாள் ஃபுல் போதை..மலேசியா ஷூட்டிங்கில் தள்ளாடி வந்த இளம் நடிகை!! பறிபோன சினிமா வாழ்க்கை..

Kerala Gossip Today Tamil Actress
By Edward Dec 24, 2025 05:30 AM GMT
Report

மலையாள இளம் நடிகை

கேரளாவை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் கூடா நட்புகளுடன் சேர்ந்து தவறான பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டு பெயரை கெடுத்துக்கொண்டார். இந்த மோசமான பழக்கத்தில் நடிகையின் சினிமா வாழ்க்கையே முடிந்துபோகும் அளவிற்கு மாறியது.

4 நாள் ஃபுல் போதை..மலேசியா ஷூட்டிங்கில் தள்ளாடி வந்த இளம் நடிகை!! பறிபோன சினிமா வாழ்க்கை.. | Actress Shoot Reportedly Due To Intoxication

மலையாள நடிகையான இவரின் நடனத்தை பார்த்த இயக்குநர், தன்னுடைய படத்தில் நடிகையை அறிமுகப்படுத்தினார். 13 வயதிலேயே ஹீரோயினாக நடித்த அந்த நடிகை, தமிழிலும் நடித்து நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தினார். முதல் படமே வெற்றிப்பெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடித்து அனைவருக்கும் பிடித்த நாயகியானார்.

இவர் நடித்தால் படம் வெற்றி என்று கூறும் அளவிற்கு ராசியான நடிகையாக மாறினாலும் கூடா நட்புகளால் சில மோசமான பழக்கத்தை கற்றுக்கொண்டு எப்போது போதையிலேயே இருந்துள்ளார். இந்த போதைப்பழக்கத்தால் பீக்கிலிருந்த நடிகைக்கு படவாய்ப்பே இல்லாமல் போக, கடைசியில் இந்த நடிகை இருக்கும் இடமே தெரியாமல் போனது.

4 நாள் ஃபுல் போதை

சமீபத்தில் அவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பொது இடத்தில் ஒரு நபரை அடித்து துன்புறுத்திய வழக்கில் சிக்கி தலைமறைவாகினார். அந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து இளம் நடிகைக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வந்ததன் பின், படப்பிடிப்புக்காக படக்குழுவினருடம் மலேசியா சென்றுள்ளார்.

4 நாள் ஃபுல் போதை..மலேசியா ஷூட்டிங்கில் தள்ளாடி வந்த இளம் நடிகை!! பறிபோன சினிமா வாழ்க்கை.. | Actress Shoot Reportedly Due To Intoxication

ஆனால் மலேசியா சென்றதும், தன்னுடைய வேலையை காட்டியிருக்கிறார் அந்த நடிகை. தொடர்ந்து 4 நாட்கள் படப்பிடிப்புக்கு வராமல், ஹோட்டல் அறையின் கதை சாத்திக்கொண்டு இருந்துள்ளார். இதனால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போய்விட்டது.

காலை 9 மணிக்கு படப்பிடிப்புக்கு வரவேண்டிய நடிகை மதியத்துக்கு மேல் எழுந்திருக்கவே முடியாதபடி ஒருவிதமான போதை மயக்கத்தில் தள்ளாடிக்கொண்டே வந்துள்ளார்.

இதனால் கடுப்பான இயக்குநர், இப்படியே போனால் ஷூட்டிங் நடத்தமுடியாது என்று தயாரிப்பாளரிடம் சொல்ல, தயாரிப்பு நிறுவனம் அந்த நடிகையை நீக்கிவிட்டு வேறொரு நடிகையை கமிட் செய்துள்ளனர். திறமையான நல்ல இளம் நடிகை மோசமான கெட்டப்பழக்கத்திற்கு ஆளாகி சினிமா வாழ்க்கையையே தொலைத்துவிட்டார்.