பட பிரமோஷனுக்காக முதலமைச்சர் விஜய் ஏன் வரவில்லை!! மகன் ஜேசன் சஞ்சய் சொன்ன காரணம்
ஜேசன் சஞ்சய்
முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள படம் தான் சிக்மா. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் ஜேசன் சஞ்சய்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய தந்தை தன் பட நிகழ்ச்சி வராததற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், முதல்வர் விஜய் சிக்மா படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். படத்தின் பிரமோஷனுக்காக விஜய் என்ன செய்வார் என்று கேட்கிறீர்கள். இந்த பிரமோஷன் படத்தையொட்டியே இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அதனால் அதை வேறு எதனுடனும் கலக்க நான் விரும்பவில்லை.
அதுமட்டுமின்றி, அவர் இப்போது முதல்வராக இருக்கிறார். அவருக்கு நிறைய பொறுப்புகள் இருக்கிறது. நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை கான அவர் காத்திருக்கிறார்.
நானும் ஆவலுடன் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும், விஜய் உங்களுக்காக சினிமாவில் எதை விட்டுச் சென்றார்? என்ற கேள்விக்கு, அவர் தன்னுடைய ரசிகர்களை கொடுத்திருக்கிறார் என்று சிரிப்புடன் தெரிவித்துள்ளார் ஜேசன் சஞ்சய்.