மகளுக்காக விஜய் மகன் ஜேசன் சஞ்சய்-ஐ கரெக்ட் பண்ண பிளான் போடும் பிரபல நடிகையின் கணவர்!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வந்தவர் இயக்குனர் ராஜகுமாரன். நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்து இரு பெண்பிள்ளைகளை பெற்றெடுத்தார்.
தேவயானி திருமணத்திற்கு பின் படங்களில் கதாநாயகியாக நடிப்பதை நிறுத்திவிட்டு குணச்சித்திர ரோலிலும் சீரியலிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ராஜகுமாரன் அளித்த பேட்டியொன்றில் 1999ல் அஜித், பார்த்திபன், தேவயானி நடித்து வெளியான நீ வருவாய் என படத்தில் பார்த்திபன் ரோலில் நடிகர் விஜய் நடிக்கவிருந்தது.
ஆனால் சில காரணங்களால் விஜய் நடிக்கமுடியாமல் போனதால் அஜித்துடன் பார்த்திபன் நடித்தார். ஆனால் இப்போது நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகத்தின் ஸ்க்ரிப் தயாராகி இருப்பதாக கூறியிருக்கிறார்.
அதில் என் மகள் இனியா கதாநாயகியாக நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், முதல் பாகத்தில் விஜய் நடிக்கமுடியாமல் போனதால் இரண்டாம் பாகத்தில் விஜய்யின் மகனை நடிக்கவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஹய்யிடன் நேரடியாக கேட்கப்போவதாகவும் ராஜகுமாரன் தெரிவித்திருக்கிறார். நீ வருயாய் என ஸ்க்ரிப்டை 10 பேரிடம் கூறிவிட்டதாகவும் ஒரு ரோலில் விஜய் மகன் சஞ்சய் மற்றொரு ரோலில் இயக்குனர் விக்ரமனின் மகன் கனிஷ்கா விக்ரம் என்றும் உறுதியாக கூறியிருக்கிறார்.
சமீபத்தில் தான் ராஜகுமாரன் - தேவயானி மகள் 12 ஆம் வகுப்பு முடித்து கல்லூரி சேர்ந்திருக்கிறார். விஜய் மகனும் தற்போது இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் ராஜகுமாரனின் இந்த ஆசை கூடிய சீக்கிரம் நிறைவேற வேண்டும் என்று ரசிகர்கள் கருத்துக்களையும் கூறி வருகிறார்கள்.