என் மகளுக்கு விஜய்யின் பையன் தான் ஹீரோ..கதையை ரெடி பண்ண தேவயானி கணவர்..
ராஜகுமாரன்
இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின் நீ வருவாய் என படத்தின் மூலம் இயக்குநரானவர் இயக்குநர் ராஜகுமாரன். நடிகை தேவயானியை காதலி திருமணம் செய்த ராஜகுமாரன், இரு பெண் குழந்தைகளை பெற்று சினிமாவில் இருந்து விலகினார்.

தற்போது பல தொழில்களில் ஈடுபட்டு வரும் ராஜகுமாரன், பல பேட்டிகளில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், இயக்குநர் மகேந்திரன், நடிகர் கமல் ஹாசன் பற்றி பேசி பெரிய ட்ரோலில் சிக்கினார்.
விஜய்யின் பையன் தான் ஹீரோ
இதனையடுத்து வேறொரு பேட்டியொன்றில், நீ வருவாய் என படத்துக்கான இரண்டாம் பாகத்தின் கதையை கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். விஜய் பையன் ஜேசன் சஞ்சய் தான் ஹீரோ, என் மகள் இனியா தான் ஹீரோயின்.

தேவயானியும் இப்படத்தில் இருப்பார், அவர் ஏனென்றால் முதல் பாக கதையை நினைவுப்படுத்துவதற்கு தான். அவர் லைனில்தான் இந்தக்கதை நடக்கும். விஜய் தான் என் இயக்கத்தில் நடிக்கவில்லை, அவரது மகனாவது நடிக்கட்டுமே என்று ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.