ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடித்த விஜய்!! சங்கீதாவுடன் விவாகரத்துக்கு இப்படியொரு முற்றுப்புள்ளி வைத்த தளபதி..
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் நேற்று தியேட்டர்களில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் பலர் வாரிசு படத்தினை கொண்டாடி வருகிறார்கள்.

விஜய் - சங்கீதா
இது ஒரு புறம் இருக்க, விஜய் - சங்கீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர் என்ற வதந்தி செய்திகள் பரவி வருகிறது. இணையத்தில் எடிட் செய்யப்பட்ட விக்கிப்பீடியா புகைப்படத்தால் கிளம்பி இந்த ரூமர் செய்திக்கு விஜய் எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று பலர் கூறி வருகிறார்கள். 22 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இரு குழந்தைகள் வளர்ந்தப்பின் இப்படியொரு முடிவை எப்படி விஜய் எடுப்பார் என்றும் பலர் கூறி வந்தனர்.

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் வெகேஷனை முடித்துவிட்டு விஜய் - சங்கீதா வாரிசு படத்தினை சென்னை மயிலாப்பூரில் இருக்கும் பிரபல நிறுவனத்தின் திரையரங்கில் பார்த்துள்ளனர். வாரிசு படத்தினை பார்த்தபடியே விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகர் விஜய். கேவலமான வதந்தி குறித்து அமைதியாக இப்படியொரு வேலையை செய்து ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடுத்துள்ளதை ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.