என்னடா இது விஜய்க்கு வந்த சோதனை!! ரசிகர்களை சந்திக்க சென்ற இடத்தில் அபராதம் போட்ட போலிசார்..

Vijay Gossip Today Varisu
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது தமிழ், தெலுங்கு இரு மொழி படமாக உருவாகியுள்ள இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பனையூர் விஜய் மக்கள் இயக்கம்

தில் ராஜு தயாரிப்பில் இப்படம் பொங்கல் அன்று வெளியாக பட்க்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் வாரிசு படத்தோடு நடிகர் அஜித்தின் துணிவு படமும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், வாரிசு படத்தினை தெலுங்கு திரையுலகில் வெளியிட சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் விஜய்.

இதற்கு பல காரணங்களும் விளக்கங்களும் பலர் தெரிவித்து வந்த நிலையில் விஜய் கடந்த ஞாயிறு அன்று அவரது பனையூர் விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்தார். கட்சி சார்ந்த உறுப்பினர்களுடன் கலந்துரையாட அவர்களுக்காக பிரியாணியும் பகிரப்பட்டது.

அபராதம்

இந்நிலையில் விஜய் அந்த நிகழ்வை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது அவர்களது ரசிகர்கள் விஜய்யின் காரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது விஜய்யை காரில் இருந்தபடி பார்த்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில் விஜய்யின் காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியதாக கூறி போக்குவரத்து போலிசார் விஜய்க்கு ரூ. 1000 அபராதம் விதித்துள்ளார்கள். மோட்டார் வாகனச்சட்டத்தை மீறி இந்த செயலில் ஈடுபட்டதால் இந்த அபராதம் வழங்கப்பட்டுள்ளது. தன் ரசிகர்கள் பாசத்தால் எடுத்த வீடியோ விஜய்க்கே பிரச்சனையாக அமைந்துள்ளது.