நடிகராக ரூ. 275 கோடி சம்பளம் வாங்கிய விஜய்!! இனி எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Vijay Tamil nadu Chief Minister of Tamil Nadu Tamil Nadu Election 2026
By Jai May 06, 2026 06:45 AM GMT
Report

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் சிறப்பான ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் விஜய் முதலமைச்சராக நாளை பொறுப்பேற்கவுள்ளார்.

எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து தவெக போட்டியிட்ட நிலையில் பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து விஜய் தலைமையிலான அரசு ஆட்சி அமைக்கவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நடிகராக ரூ. 275 கோடி சம்பளம் வாங்கிய விஜய்!! இனி எவ்வளவு சம்பளம் தெரியுமா? | Vijay Tamil Nadu Cm Monthly Salary From Film

சினிமாவில் விஜய் உச்ச நட்சத்திரமாக இருந்து பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆக திகழ்ந்து வந்தார். ஜனநாயகன் படத்திற்காக சுமார் ரூ. 220 முதல் 275 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார்.

விஜய் வருடத்திற்கு ஒரு படம் மட்டும் நடிக்கும் நிலையில் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 150 - 200 கோடியை கடந்த 6 வருடங்களாக பெற்று வருகிறார். தற்போது சினிமாவை முழுமையாக விட்டு அரசியலுக்கு வந்த விஜய் தற்போது முதலமைச்சர் என்ற பொறுப்பை ஏற்கவுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சம்பளம்

இந்த மாபெரும் பொறுப்புக்கு விஜய் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?. தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாதம் ரூ. 2,05,00 வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 200 கோடிக்கும் மேல் வாங்கிய விஜய் தற்போது 24.6 லட்சம் சம்பளமாக வாங்கப்போகிறார்.

நடிகராக ரூ. 275 கோடி சம்பளம் வாங்கிய விஜய்!! இனி எவ்வளவு சம்பளம் தெரியுமா? | Vijay Tamil Nadu Cm Monthly Salary From Film

மேலும் அரசு சார்பில் முதல்வர் தங்குவதற்கு வீடு, குண்டு துளைக்காத சிறப்பு சாகனங்கள், இசட் பிளஸ் அந்தஸ்து பாதுகாப்பு, முதல்வர் மற்றும் முதல்வர் குடும்பத்திற்கான மருத்துவக் காப்பீடு, முதல்வர் வீடு, அலுவலங்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகள், முதல்வருக்கான பயணச் செலவுகளை முழுமையாக அரசு ஏற்கும்.

அலுவலத்திலும் வீட்டிலும் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கான ஊதியம் போன்றவை அரசே ஏற்றுக்கொள்ளும்.