தளபதி 65ல் குடித்துவிட்டு வரும் பிரபலம்! சன் பிக்சர்ஸ் மீது கடும்கோபத்தில் திட்டிய விஜய்!

vijay master Nelson thalapthi66
By Jon Mar 17, 2021 07:33 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து பல லட்ச ரசிகர்களை தன் நடிப்பு திறனால் ஈர்த்து வருபவர் நடிகர் விஜய். சமீபத்தில் மாஸ்டர் படம் வெளியாக பட்டையை கிளப்பியதை அடுத்து தளபதி 65 படம் ஆரம்பிக்கப்பட்டு வேலை நடந்து கொண்டிருக்கிறதாம். அந்தவகையில் விஜய்யின் 65வது படத்தினை கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.

இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக நண்பன் படத்தில் இருந்த மனோஜ் பரமஹம்சா பணியாற்றவிருக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்பு ஆரம்பித்து படவேலை சென்று கொண்டிருக்கையில் ஒளிப்பதிவாளர் மனோஜ் வேலையில் இருக்கும் போது குடித்துவிட்டு வருவதாக கூறப்பட்டது.

இதையறிந்த தளபதி விஜய் கடும் கோபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கோபத்தினை காட்டி பேசியுள்ளார். உடனே அவருக்கு பதிலாக வேறொருவரை பார்க்கலாமா என்று கேட்டுள்ளனர் சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதற்கு வேண்டாம் அவரை குடிக்காமல் வேலை பார்க்க சொல்லுங்க அதுவே போதும் என்று கூறியுள்ளாராம் விஜய். இந்த செய்தியை பிரபல பத்திரிக்கையாளர்கள் வீடியோ ஒன்றில் குறிப்பிட்டு பேசியுள்ளனர்.