தன்னை விட 23 வயது குறைந்த நடிகையுடன் ஜோடி சேரும் தளபதி விஜய்.. முதல் முறையாக இணையும் ஜோடி
Vijay
Thalapathy 68
By Kathick
லியோ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள படம் தளபதி 68. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்க பிரபு தேவா, பிரஷாந்த், பிரியங்கா மோகன், சினேகா என பலரும் நடிக்கிறார்கள் என ஏற்கனவே தகவல் வெளியானது.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 4ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் 26 வயது இளம் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஏற்கனவே தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலை எனும் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.