துண்டை போடும் சன் பிக்சர்ஸ்! விஜய் டிவி பிரபலங்களால் சூர்யாவுக்கு ஏற்பட்ட இழப்பு..

ramar suriya pugazh EtharkkumThunindhavan thangatthurai
By Edward Mar 12, 2022 04:45 AM GMT
Report

சூரரை போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்தது. ஆனால் சூர்யா நடிப்பில் தியேட்டரில் 3 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10-ஆம் தேதி வெளியானது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் முதல் நாளே 14 கோடியை வசூலித்துள்ளது. ஆனால் படத்தின் எதிர்ப்பார்ப்பை விட வசூலும் கம்மிதான் என்று பலர் கூறி வருகிறார்கள். அதிலும் பல தியேட்டர்கள் காலியாக இருப்பதாக புகைப்படங்களும் அது சம்பந்தம்மான மீம்ஸ்களும் இணையத்தில் வெளியாகி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

இப்படத்தில் விஜய் டிவி பிரபலங்களின் ரோல்களை எதற்கு வைத்தார்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார். தங்கதுறை, ராமர், புகழ் போன்றவர்களின் காமெடியும் நடிப்பும் படத்தில் ஒர்க்கவுட் ஆகவில்லை.

அதற்கு பதில் இயக்குனர் வேறு காட்சிகளை வைத்திருக்கலாம் என்று புலம்பி வருகிறார்கள். இதனால் போட்ட பணத்தை கூட படம் எடுக்குமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.