குக் வித் கோமாளி சீசன் 6 ஸ்டார்ட்!! இந்த பிக்பாஸ் போட்டியாளர் கன்பார்ம்-ஆ?

Bigg Boss Star Vijay Cooku with Comali Soundariya Nanjundan
By Edward Apr 05, 2025 10:30 AM GMT
Report

குக் வித் கோமாளி 6

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. கடந்த ஆண்டு குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கநாஜ் தலையில் நடைபெற்றது.

குக் வித் கோமாளி சீசன் 6 ஸ்டார்ட்!! இந்த பிக்பாஸ் போட்டியாளர் கன்பார்ம்-ஆ? | Vijay Tv Cook With Comali Season 6 Bb8 Soundarya

நிகழ்ச்சியில் போது மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் மணிமேகலை தொகுத்து வழங்குவதில் இருந்து பாதியிலேயே விலகினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5ன் டைட்டில் வின்னராக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டிருந்தார். குக் வித் கோமாளி சீசன் 5 முடிந்து கிட்டத்தட்ட 6 மாதத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

மணிமேகலை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகி வேறொரு டிவிக்கு சென்ற நிலையில் அவருக்கு பதில் ரக்ஷனுடன் சேர்ந்து யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

குக் வித் கோமாளி சீசன் 6 ஸ்டார்ட்!! இந்த பிக்பாஸ் போட்டியாளர் கன்பார்ம்-ஆ? | Vijay Tv Cook With Comali Season 6 Bb8 Soundarya

செளந்தர்யா

இந்நிலையில் பிக்பாஸ் 8 சீசனில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்த பிக்பாஸ் செளந்தர்யா குக் வித் கோமாளி சீசன் 6ல் பங்கேற்கவுள்ளராம். போட்டியாளராகவா? அல்லது கோமாளியாகவா? அல்லது தொகுப்பாளராகவா? இதில் எந்த ரோலில் கலந்து கொள்கிறார் என்று தகவல் வெளியாகவில்லை.

தன்னுடைய குரலால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த செளந்தர்யா, குக் வித் கோமாளி சீசன் 6ல் கலந்து கொண்டுள்ளது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Gallery