மேலும் சரிந்த விஜய் டிவி டிஆர்பி.. இவ்வளவு குறைவா? டாப் 10 லிஸ்ட் இதோ
தற்போது சின்னத்திரை சேனல்களுக்கு இடையே பெரிய போட்டி இருக்கும் நிலையில், புதுப்புது தொடர்களாக போட்டிபோட்டுக்கொண்டு அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய சிங்கப்பெண்ணே தொடர் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. ஏற்கனவே முதலிடம் பிடித்து வந்த கயல் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
சரியும் விஜய் டிவி ரேட்டிங்
விஜய் டிவி தொடர்களின் ரேட்டிங் தொடர்ந்து சரிந்து வருகிறது. 45வது வாரத்தில் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய இரண்டு தொடர்களுமே 6.97 புள்ளிகள் பெற்று இருந்தது.
ஆனால் 46வது வாரத்தில் அது மேலும் சரிந்து இருக்கிறது. தற்போது சிறகடிக்க ஆசை 6.79, மற்றும் பாக்கியலட்சுமி 6.65 புள்ளிகள் மட்டுமே பெற்று இருக்கிறது.
டாப் 10 சீரியல்கள்
கடந்த வாரம் (2023ன் 46வது வாரம் நவம்பர் 11 - 17) அதிகம் ரேட்டிங் பெற்ற டாப் 10 தொடர்கள் லிஸ்ட் இதோ..
- சிங்கப்பெண்ணே - 10.66
- கயல் - 10.34
- வானத்தைபோல - 9.73
- எதிர்நீச்சல் - 9.65
- சுந்தரி - 9.47
- இனியா - 7.72
- ஆனந்தராகம் - 7.43
- சிறகடிக்க ஆசை - 6.79
- பாக்கியலட்சுமி - 6.65
-
கார்த்திகை தீபம் - 6.35