எனக்கு எத்தனை புருஷன் இருக்கான்னு லிஸ்ட் கொடுங்க!! திருநங்கை வைஷு கேள்வி..
நாஞ்சில் விஜயன்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் தான் நடிகர் நாஞ்சில் விஜயன். ஒருசில படங்களில் நடித்து வரும் நாஞ்சில் விஜயன், சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் திருநங்கை ஒருவர் அவர்மீது பாலியல் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நாஞ்சில் விஜயன் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வந்தார். திருநங்கையின் குற்றச்சாட்டு கூறி 2 நாட்களாகியப்பின் நாஞ்சில் விஜயன் ஒரு வீடியோவை பகிர்ந்து அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
திருமணத்திற்கு பின் அடிக்கடி இரவில் கால் செய்து செல்போனில் மெசேஜ் அனுப்பி தன்னை டார்ச்சர் செய்தார். வட்டிக்கு காசு கொடுக்கும் திருநங்கை எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் தனக்கு மூன்று லட்சம் கொடுத்ததாக கூறுவதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவும் நாஞ்சில் விஜயன் தெரிவித்துள்ளார்.
நான் திருநங்கையை காதலித்தேன் என்பதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா? இது வெறும் பப்ளிசிட்டிக்காக பண்ணக்கூடிய ஃபைட் என்று குற்றம்சாட்டினார்.
திருநங்கை வைஷு
இதைபார்த்த திருநங்கை விஜே வைஷு, நான் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறேன் என்று சொல்கிறார் நாஞ்சில். அப்படி நான் இருந்திருந்தால் என் நிலைமை இப்படி மோசமாகியிருக்காது.
3 லட்சம் கொடுத்ததற்கு ஆதாரம் என் மனசாட்சியும் காதலும் தான். மனசாடி என்று ஒன்று இருந்தால் அந்த பணத்தை திருப்பி கொடுங்க. நான் பப்ளிசிட்டிக்காக இதை செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறுகிறார். நாஞ்சில் விஜயன் என்ன ரஜினி, கமல், அஜித், விஜயா, இப்போது விஜய் தொலைக்காட்சியில் தனம் என்ற சீரியலில் நான் நடித்து வருகிறேன்.
வைஷ்ணவி என்றால் அனைவருக்கும் தெரியும் என்பதால் எனக்கு என்ன பப்ளிசிட்டி தேவை இருக்கிறது. வைஷுவை திருமணம் செய்து கொண்டால் அவர் ஏற்கனவே பாலியல் தொழில் செய்து கொண்டு இருந்தவர். அவரது முந்தைய கணவர்கள் கேட்க மாட்டார்களா என்று கேட்கிறார்.
எனக்கு இதற்கு முன் எத்தனை கணவர்கள் இருந்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை, அந்த பட்டியலை அவர் வெளியிடுவாரா? நாஞ்சிலின் மனைவி மரியாவும் ஒரு விஷயம் சொல்லியுள்ளார். இந்த பிரச்சனையால் தலைக்காட்ட முடியவில்லை என்று. என்னாலும் தகைக்காட்ட முடியவில்லை.