விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் இந்தி கலாச்சார கொண்டாட்டம்!! தளபதியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..

Vijay K. Annamalai Gossip Today Thamizhaga Vetri Kazhagam
By Edward Feb 20, 2025 11:30 AM GMT
Report

விஜய் வித்யாஷ்ரம்

இந்தியா முழுவதும் மும்மொழிக் கொள்கையை அறிமுகம் செய்யவிருப்பதால் அதற்கு தமிழ் நாட்டில் பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்ப்பில் போராட்டகளும் நடந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய் எதிர்த்து ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய், விஜய் வித்யாஷ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார்கள் என்று பேசியிருந்தார். இதுகுறித்து பலரும் விஜய்யின் பள்ளி குறித்து ஆராயத் துவங்கினர்.

விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் இந்தி கலாச்சார கொண்டாட்டம்!! தளபதியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்.. | Vijay Vidyashram School Celeb Hindi Cultural Day

இந்நிலையில் விஜய்யின், விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் இந்தி கலாச்சார விழா நடந்துள்ளதாகவும் 4 வாரங்களுக்கு முன் இந்த இந்தி கலாச்சார நாள் உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றதாகவும் புகைப்படங்களுடன் தகவல் வெளியாகிது. இதற்கு பலரும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.