மனைவி சங்கீதாவுடன் வாரிசு படம் பார்த்துவிட்டு கோபம்!! விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படத்தில் நடித்துள்ளார் விஜய். வித்தியாசமான கதாபாத்திரத்தில் குடும்பம் மற்றும் மாஸ் கதைக்களமாக அமைந்துள்ள வாரிசு படம் நாளை காலை 4 மணிக்கு தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியாக வெளியாகவுள்ளது.

விஜய் - சங்கீதா விவாகரத்து
இதற்கிடையில் விஜய் - சங்கீதா 22 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்து விவாகரத்து பெற்றுவிட்டதாக வதந்தி செய்திகள் பரவியது. விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை சங்கீதா தவிர்த்து வந்ததாக கூறப்பட்டது.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பே தன் தந்தை இருக்கும் வெளிநாட்டு வீட்டிற்கு குழந்தைகளுடன் வெகேஷன் சென்றுள்ளதால் தான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
மேலும், விக்கிப்பீடிய தளத்தில் விஜய்க்கு விவாகரத்தாகிவிட்டதாகவும் நடிகை கீர்த்தி சுரேஷை திருமணம் செய்யவுள்ளதாகவும் எடிட் செய்யப்பட்டது. அதிலும் 2 குழந்தை இருக்கும் விஜய்க்கு 3 குழந்தைகள் இருப்பதாகவும் எடிட் செய்து பரபரப்பை ஏற்படுத்தி அதன்பின் மாற்றப்பட்டது.

வதந்திக்கு முற்றிப்புள்ளி
இந்நிலையில், மனைவி சங்கீதாவுடன் நடிகர் விஜய் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் பிரபல நிறுவனத்தின் திரையரங்கில் படத்தினை பார்த்துள்ளாராம். திட்டமிட்ட படி விஜய் படத்தினை மனைவியுடன் பார்க்க சென்றிருந்த போது. வாரிசு படத்தினை திரையிட மிக்ஸிங் முடியாத நிலையில் சில நேரம் ஆனதாம்.
குறித்த நேரம் கூறிவிட்டு இப்படி காத்திருக்க வைத்ததால் விஜய் கோபப்பட்டு திட்டியும் இருக்கிறார். அதன்பின் படத்தினை பார்க்க காத்திருந்து இரவு 8.30 மணிக்கு முடிந்தப்பின் வீடு திரும்பி இருக்கிறாராம் விஜய். இதிலிருந்து விவாகரத்து வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்தார் விஜய் என்று பலர் கூறி மகிழ்ச்சியுடன் வாரிசு படத்தினை கொண்டாடி வருகிறார்கள்.
