விஜய்யை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் !! கணவர் அ டித்து மண்டையை உ டை த்துவிட்டார் ! சீரியல் நடிகை

actress vijay serial kumari
By Jon Mar 14, 2021 04:04 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு அப்பார்ப்பட்டு பேசப்படும் கதாபாத்திரமாக இருப்பது அம்மா, அண்ணி, தோழி கதாபாத்திரம். அப்படி குணச்சித்திர வேடத்தில் பல படங்களில் நடித்து வருபவர், நடிகை செந்தி குமார். 41 வயதான இவர் தற்போது திரைப்படங்கள், சீரியல்கள் என நடித்து பிஸியாக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒரு நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக முன்னணி நடிகராக விளங்குபவர் தளபதி விஜய்.இவர் தனது ரசிகையான சங்கீதாவை திருமணம் முடித்துக்கொண்டார். இந்த நிலையில் தற்போது விஜய் பற்றிய ஒரு உண்மையை கூறியுள்ளார். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் திருமணத்துக்கு அப்புறம்தான் நடிக்கவே வந்தேன்.

நான் விஜயை கல்யாணம் செய்ய ஆசைபட்டேன், ஏன் என்றால், நான் அவரது தீவிர ரசிகை. அவரை பார்க்கவேண்டும் என எனக்கு நீண்ட நாள் ஆசை. திருப்பாச்சி படத்தில் என் சகோதரி நடித்தார்.அப்போது விஜய்யை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரை நேரில் பார்க்கவேண்டும் என ஆசையோடு கிளம்பினேன். என் கணவர் தடுத்தார். அவர் தள்ளிவிட்டத்தில் என் தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது. அதையும் மீறி விஜய்யை பார்க்க சென்றேன்.