2026ல் சினிமாவுக்கு விஜய் வருவாரு..நடக்குமாம்ன்னு பாருங்க!! அடித்து சொல்லும் நடிகை சிந்தியா..
நடிகை சிந்தியா
நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான படம் தான் தினசரி. இப்படத்தில் கதாநாயகியாக படத்தை தயாரித்த சிந்தியாவே நடிகையாக நடித்திருந்தார். இப்படத்தில் நடித்ததை பலரும் சிந்தியாவை விமர்சித்து வந்தனர்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், என்னை ட்ரோல் செய்யும் போது எனக்கு ஜாலியாக இருந்தது. அதை நான் மிகவும் ரசித்தேன். ஏனென்றால் என்னை யார் என்றே தெரியாமல் இருந்தது.
அப்போது அந்நேரத்தில் தினசரி படத்தின் பாடல் வெளியாகி எந்தவித ரெஸ்பான்ஸும் இல்லாமல் இருந்தது. நெகட்டிவ் விமர்சனம் வந்தது. அதுபற்றி நான் கவலைப்படவில்லை என்று தெரிவித்தார்.

விஜய் வருவாரு
இந்நிலையில், அனலி என்ற படத்தின் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய, சிந்தியாவிடம், விஜய் சினிமாவில் இருந்து விலகியது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், 2026 ஏப்ரல் தேர்தலா, மே ரிசல்ட் வருமா, நவம்பர்ல திரும்ப வருவாருங்க, நான் சொல்கிறேன், நடக்குமா இல்லையான்னு பாருங்க அவர் வருவேன், அதெல்லாம் நடக்கும், எனக்கு யோசியம் தெரியும், அதனால தான் சொல்றேன், என்னோட தயாரிப்பில் அவர் நடிப்பார் என்று சிந்தியா கூறியிருக்கிறார்.