அதிர்ஷ்டத்தால் தான் விஜய் CM ஆனார்..கஷ்டமே படல!! நடிகை ரோஜா அதிரடி ஸ்பீச்..
சினிமாவைவிட்டுவிட்டு, ஆந்திர அரசியலில் ஈடுபட்டு எம் எல் ஏ பதவியிலும் பணிபுரிந்து, தற்போது மீண்டும் நடிப்பு பக்கம் வந்தவர் தான் நடிகை ரோஜா.
2022ல் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த ரோஜா, அதன்பின் தோல்வியை தழுவி, அன்பே டயானா படத்தில் நடித்தும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றியும் வந்தார்.

அதிர்ஷ்டத்தால் தான்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் வில்லன்களை பந்தாடி மக்களை காப்பாற்றுவதை போல் நிஜத்திலும் மக்களை காப்பாற்றுவார் என்று நம்பியே மக்கள் அவருக்கு வாக்கு அளித்துள்ளனர். அவர் அரசியலில் குதித்தவுடனே முதலமைச்சர் ஆவதெல்லாம் அதிர்ஷ்டம் மட்டுமே. அதற்காக அவர் எந்த பெரிய முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
சொல்லப்போனால், கரூர் சம்பவத்திற்குப்பின் அவர் தமிழ்நாட்டிலுள்ள பல தொகுதிகளுக்கு பிரச்சாரம் கூட போகவில்லை. ஆனாலும் மக்கள் அவரை நம்பி முதலமைச்ச்ராக மாற்றிவிட்டார்கள் என்று பேசியுள்ளார்.

மேலும் ரோஜாவிடம், விஜய், தன்னுடைய தவெக கட்சியை புதுச்சேரி, ஆந்திரா, கேரளா என மற்ற இடங்களிலும் வலுப்படுத்தும் முயற்சியில் உள்ளதே இந்த அரசியலை நீங்க எப்படி பார்க்குறீங்க என்ற கேள்விக்கும் பதிலளித்துள்ளார். ஜெகன் சாருக்கும் இதேபோல் வாய்ப்புகள் வந்தது.
பெங்களூர், தமிழ்நாட்டில் எல்லாம் அரசியல் கட்சிகலை தொடங்கலாம் என்றனர், ஆனால், அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பல இடங்களில் கால் வைக்கக்கூடாது, ஒரு இடத்தில் நிலையாக நிற்காமல் பல இடங்களில் கால் வைத்தால் அனைத்து இடத்திலும் இல்லாமல் போய்விடுவோம் என்று ரோஜா வெளிப்படையாக பேசியுள்ளார்.
சினிமால Vijay மக்கள காப்பாத்துனாரு, மக்கள் Vote போட்டுட்டாங்க அவ்ளோதான் - Roja Breaking Interview
— Cineulagam (@cineulagam) September 21, 2026
▶ https://t.co/Ygnw0EvJk2#roja #actressroja #rojainterview #actressrojainterview #leninpandiyan #gangaiamaran #isaignani #ilayaraja #balachandran #bosevenkat #Shrritarao… pic.twitter.com/Tl0l4EcLsk