விஜயகாந்தை காலி பண்ணதே அந்த ஒரு விஷயம் தான்!..பரபரப்பை கிளப்பும் பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் தான் நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடித்த படங்களில் சாதி மற்றும் அரசியல் கருத்துக்களை குறித்து பேசி வெகுவாக ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
விஜயகாந்த் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் முக்கியமான இடத்தை பிடித்தவர். தற்போது 71வது பிறந்தநாளை விஜயகாந்திற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் விஜயகாந்த் குறித்து பல விஷயங்களளை பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர், விஜயகாந்த் மிகவும் கடுமையாக உழைப்பவர். ஒரு வருடத்திற்கு 14 படங்களில் நடித்துள்ளார். சரியான ஓய்வு இல்லாமல் இருந்த காரணத்தினால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம்.
அதுமட்டுமின்றி விஜயகாந்த் அரசியலில் பல துரோகங்கள் சந்தித்து இருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார். இது அனைத்துமே சேர்ந்து அவரது உடலை பாதித்துவிட்டது என்று மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.