மூத்தமகன் விஜய பிரபாகரன் திருமணம் நடக்காமல் இருக்க காரணம் இதுதான்!! வெளியான தகவல்...
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவராகவும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த கேப்டர் நடிகர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சமீபகாலமாக வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். சில வாரங்களுக்கு முன் உடலில் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அதன்பின் கடந்த 27 ஆம் தேதி இரவு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின் கொரானா உறுதியானதை தொடர்ந்து 28 டிசம்பர் காலை மரணமடைந்தார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தமிழ் நாடு முழுவதும் அவரது மறைவால் துக்கத்தில் இருந்து கண்ணீர் வடித்தனர். நேற்று இரவு அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கேப்டர் பல நல்ல விசயங்களை செய்து நற்பெயரை சம்பாதித்து பல கோடி மக்களின் மனதில் இருந்து வந்தார். ஆனால் அவர் மரணத்திற்கு முன் அவரது இரு மகன்களின் திருமணத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் அவரது மகன் விஜய பிரபாகரனுக்கு கடந்த 2019ல் கோவையை சேர்ந்த தொழிலதிபரின் மகள் கீர்த்தனாவை கரம் பிடிக்க நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது. திருமணம் நடந்துவிடும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் திருமணம் தள்ளிப்போனது.
மேலும் மகனின் திருமணம் பிரதமர் மோடியில் தலைமை நடக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு காத்திருந்ததாகவும், பின் விஜயகாந்தின் உடல்நலக்குறைவு ஏற்படவே திருமணம் தள்ளிச்சென்று நடக்காமல் போனதாகவும் கூறப்படுகிறது.