திருமணமாகி 3 குழந்தைகள் இருந்தும் மஞ்சுளாவை வலையில் விழவைத்த விஜயகுமார்..
தஞ்சாவூரை சேர்ந்த நடிகை மஞ்சுளா, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு பள்ளிக்கு போகாமல் வீட்டில் சாக்குபோக்கு சொல்லிவிட்டு கட் அடித்துள்ளார். பின் பள்ளியில் இருந்து நீக்கிவிட தந்தையிடம் படிப்பில் விருப்பமில்லை, நடிப்பின் மீது தான் ஆசை என்று சொல்லியுள்ளார். பின் சம்மந்தமே இல்லையே என யோசித்த மஞ்சுளவின் அப்பா, குடும்ப நண்பரான சங்கர் கணேஷிடம் விசயத்தை கூறி சந்தி நிலையம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்.
அதன்பின் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்த மஞ்சுளா, விஜயகுமாருடன் உன்னிடம் மயங்குகிறேன் படத்தில் நடித்த போது காதல் மலர்ந்துள்ளது. ஆரம்பத்தில் நட்பாக பழகி பின் ஒருக்கட்டத்தில் மஞ்சுளாவிற்கு பிடித்துபோக, ஒரு நாள் மஞ்சுளாவிடம் நான் உன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.
விஜயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக குஊறியதால் குழம்பிப்போன மஞ்சுளா, இதை நீங்கள் என் அம்மாவிடம் தான் கேட்க வேண்டும் என மழுப்பி பதிலளித்துள்ளார். பின் விஜயகுமார் மஞ்சுளாவின் பெற்றோரை சந்தித்து திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.
அப்போது மஞ்சுளாவின் பெற்றோர், அவளுக்கு இந்த திருமணததில் விருப்பம் என்றால் எங்களுக்கு எந்தவிதமான தடையும் இல்லை என காதலுக்கு பச்சைக்கொடி காட்ட, இருவரின் திருமணமும் எளிமையான முறையில் நடந்துள்ளது. இருவரின் காதலுக்கு சாட்சியாக வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என மூன்று மகள் பிறந்தார்கள்.
அதன்பின் வனிதா செய்த தவறால் வழக்கு பிரச்சனையில் மஞ்சுளாவிற்கு மன கசப்பு ஏற்பட்டு, அவள் என் மகளே கிடையாது என்றும் அவள் என் வயிற்றில் பிறந்ததை நினைக்கும்போதே கேவலமாக இருக்கிறது என்று கூறினார். இதனால் மஞ்சுளா தினமும் குடித்ததாகவும், குடிபழக்கத்தால் 3 முறை மஞ்சள் காமாலை வந்ததாகவும் வனிதா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.