7 முறை கருக்கலைப்பு!! பேட்டிக்கொடுத்து மாட்டிவிட்ட விஜய் பட நடிகை..

Vijayalakshmi Seeman Gossip Today Tamil Actress
By Edward Aug 30, 2023 05:00 AM GMT
Report

நடிகர் விஜய் - சூர்யா இணைந்து நடித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் பிரண்ட்ஸ். இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. பல படங்களில் நடித்து பிரபலமான விஜயலட்சுமி, சில ஆண்டுகளுக்கு முன் பிரபல கட்சி தலைவருடன் நெருக்கமாக இருந்து வந்தார்.

2007ல் திருமணம் செய்யவிருந்ததாகவும் சில காரணங்களல் நின்றுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். அவரால் விஜயலட்சுமி பங்களா, வசதி வாழ்க்கை என்று வாழ்ந்து வந்தார். திடீரென தன்னை ஏமாற்றியதாக விஜயலட்சுமி அந்த கட்சி தலைவர் மீது புகாரளித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து பிரச்சனை செய்து வந்த விஜயலட்சுமி, மீண்டும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அந்த கட்சி தலைவர் மீது புகாரளித்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

பேட்டியில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், தான் கிறிஸ்துவர் என்பதால் தாலி கட்ட முடியாது என்று தெரிவித்தார் என்றும் பிரபாகரன் தலைமையில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்கிறேன் என்றும் கூறினார்.

என்னை ஏமாற்றிய அவரை கைது செய்ய வைக்காமல் விடமாட்டேன், அது நடக்கும் வரை போராட்டம் தொடரும் என்று விஜயலட்சுமி தெரிவித்திருக்கிறார்.

தனக்கு தெரியாமல் 7 முறை கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்து கருவை சிதைத்தவர் அவர் என்றும் தற்கொலைக்கு தூண்டி, என்னை பற்றி தவறாக பல செய்திகளை பரப்புவதாகவும் பேட்டியில் கூறி என் உயிருக்கு ஆபத்து, எனக்கு பாதுகாப்பு தரவேண்டியும் தெரிவித்திருக்கிறார்.