நடிகை தேவயானியை டார்ச்சர் செய்த இயக்குனர்!! வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ..

Devayani Vijayalakshmi
By Edward Feb 23, 2023 03:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து நடிகையாக பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி.

கன்னட நடிகையாக பல படங்களில் நடித்து வந்த விஜயலட்சுமி, பூந்தோட்டம், கலகலப்பு, பிரண்ட்ஸ், மிலிடரி, பாஸ் என்கிற பாஸ்கரன், தம்பி கோட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இதற்கிடையில் சில பிரச்சனைகளை சந்தித்து வந்த விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியில் தலைவர் சீமானை பற்றி அவதூறாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

நடிகை தேவயானியை டார்ச்சர் செய்த இயக்குனர்!! வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ.. | Vijayalakshmi Share Director Torchur Devayani

இந்நிலையில் இணையத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் விஜயலட்சுமி. அதில், 2 வாரங்களுக்கு முன் பத்திரிக்கையாளர்கள் எனக்கு கால் செய்து, இயக்குனர் களஞ்சியம், எனக்கு திருமணமாகிவிட்டதாக கூறி வருகிறார் என்று தெரிவித்தனர்.

கல்யாணமாகிவிட்டால் நான் ஏன் சீமானிடம் போராடப்போகிறேன். பூந்தோட்டம் படத்தில், நான் களஞ்சியம் இயக்கத்தில் நடித்த போது அப்படத்தில் என்னுடன் நடித்த தேவயானியை எப்படி டார்ச்சர் செய்தார் என்று என் கண்ணால பார்த்தேன்.

அவர கொஞ்சம் அடக்கிவாசிக்க சொல்லுங்க, இப்போதான் சீமானை பற்றி சில சோர்ஸ்-ஐயும் அவர்களிடம் கூறியதாக விஜயலட்சுமி வீடியோவில் பேசியுள்ளார். மேலும் பல விசயங்களை நடிகை விஜயலட்சுமி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.