33 ஆண்டுகளாக பாலையாவை ஒதுக்க இதுதான் காரணம்..வேறேதும் இல்லை!! நடிகை விஜயசாந்தி..

Vijayashanti Gossip Today Nandamuri Balakrishna Tamil Actress
By Jai Apr 22, 2026 01:30 PM GMT
Report

விஜயசாந்தி

80, 90களில் தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் தான் நடிகை விஜயசாந்தி. சினிமா, அரசியல் என தன்னை ஈடுபடுத்தி வரும் விஜயசாந்தி, நடிகர் பாலகிருஷ்ணாவுடன் மீண்டும் நடிக்காதது குறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.

33 ஆண்டுகளாக பாலையாவை ஒதுக்க இதுதான் காரணம்..வேறேதும் இல்லை!! நடிகை விஜயசாந்தி.. | Vijayashanti Reason Why Didnt Films With Balaiya

33 ஆண்டுகளுக்கு முன் 1993ல் வெளியான Nippu Ravva படத்தில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் நடித்தார் விஜயசாந்தி. அதன்பின் 33 ஆண்டுகளாக அவருடன் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை. அதற்கான காரணம் பற்றி கேட்டதற்கு விஜயசாந்தி வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

பாலையாவை ஒதுக்க

அதில், பாலகிருஷ்ணாவுடன் நடிக்காததற்கு கதையோ, தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளோ காரணமில்லை. அந்த சமயத்தில் எனக்கென்று ஒரு தனி பிம்பம் உருவாகியிருந்தது. அதிக சம்பளம் வாங்கும் ரோல்களாகவும், ஆக்ஷன் படங்களில் நடிக்கும் ஹீரோயினாகவும் நான் மாறியிருந்தேன்.

33 ஆண்டுகளாக பாலையாவை ஒதுக்க இதுதான் காரணம்..வேறேதும் இல்லை!! நடிகை விஜயசாந்தி.. | Vijayashanti Reason Why Didnt Films With Balaiya

அந்த சூழலில், ஒரு பெரிய ஹீரோவுக்கு ஜோடியாக மீண்டும் நடிப்பது என்பது படத்திற்கு பொருளாதார ரீதியாகவும், கதை ரீதியாகவும் இரு ஹீரோக்களை சுமப்பது போன்ற பாரத்தை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தும். அதனால் தான் நான் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்தினேன்.

சினிமாவில் தனக்கு கிடைத்த அந்தஸ்த்தையும், அதிக சம்பளத்தையும் தான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை, இது கடவுள் கொடுத்த பரிசு என்று குறிப்பிட்டுள்ளார்.