தயாரிப்பாளரிடம் வீட்டை எழுதி வாங்கிய விஜயகாந்த்!! யாரும் செய்யாததை செய்த சூப்பர் ஸ்டார்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜயகாந்த் என்றாலே பலருக்கு அவர் செய்த பல நல்ல விசயங்கள் தான் நியாபகத்திற்கு வரும். அப்படி அவரால் ஒருவர் பாதிப்படைந்து நடுத்தெருவுக்கு வரும் அளவிற்கு மாறியிருக்கிறார்.
2004 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி தோல்வி படமாக மாறியது கஜேந்திரா. அப்படத்தினை தயாரித்த சிஏ துரை பெரும் நஷ்டத்தை சந்தித்ததால் விஜயகாந்திற்கு சம்பளம் கொடுக்கமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார்.

அப்படி மாட்டிக்கொண்ட விஏ துரையிடம் விஜயகாந்த் சம்பளத்திற்கு பதிலாக அவரது வீட்டை எழுதி வாங்கியிருக்கிறார். இப்படத்தினை தொடர்ந்து சில படங்களை தயாரித்து வெற்றி தோல்வியையும் சந்தித்திருந்தார்.
ஆனால் பாலாவின் பிதாமகன் படம் கதை ரீதியாக வெற்றிப்பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியை கண்டார். இதன்பின் சமீபத்தில் தனக்கு சிறுநீரக பிரச்சனை இருந்து பணமில்லாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும் பாலா தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் பேட்டிகளில் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் யாரும் உதவிகரம் காட்டாத நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே உடனே உதவியை செய்து இருக்கிறார். அவருக்காக 15 வருடங்களுக்கு முன்பே கல்யாண மண்டபம், வீடு என்று வாங்கி கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
அன்று விஜயகாந்த் மட்டும் அவரிம் வீட்டினை வாங்காமல் இருந்திருந்தால் அவரின் நிலைமை பாதிப்பு அடையாமல் இருந்திருக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.