ரஜினி, விஜய்யை ஓரம் கட்டிய கமல்? ரிலீஸ் ஆகாமல் இத்தனை கோடி லாபத்தில் ராஜ்கமல் நிறுவனம்!!
இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் தயாரித்து நடித்துள்ள படம் விக்ரம். விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா இணைந்து நடித்துள்ள இப்படம் வரும் ஜூன் 3ல் உலகளவில் வெளியாகவுள்ளது.
தமிழகத்தில் இருக்கும் 1000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் மூலம் 35 கோடிக்கு தமிழ்நாடு தியேட்டர்களில் திரையிடும் உரிமையை ரெட் ஜெயிண்ட் பெற்றுள்ளது.
மேலும் தென்னிந்தியாவில் மட்டும் அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் விக்ரம் படத்தின் சாட்லைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை 98 கோடிக்கும் ஹாரட்ஸ்டார் வாங்கியுள்ளதாம்.
மேலும், ஹிந்தி என வட இந்திய தியேட்டர்களில் திரையிடுவதற்காக என ஒட்டுமொத்த வரவாக 204.75 கோடி படம் ரிலீசுக்கு முன்பே விக்ரம் படம் பிஸ்னஸ் ஆகியுள்ளது. 118 நாட்களில் எடுக்கப்பட்ட விக்ரம் படத்தின் ஒட்டு மொத்த செலவு 150 கோடி.
தற்போது பிசினஸ் ஆகியிருக்கும் விக்ரம் படத்தில் இருந்து மட்டும் 54.75 கோடி தயாரிப்பாளருக்கு மட்டுமே கிடைத்த லாபமாகும். இதனால் ரஜினி, விஜய் சாதனையை விக்ரம் படம் முறியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறி வருகிறார்கள்.