ரூ. 33 லட்ச விலை மனித குரங்கு விவகாரம்..சியான் விக்ரம் பின்னணியில் பிரபல தொழிலதிபர்..
சியான் விக்ரம் சில நாட்களுக்கு லார் கீபன் என்ற அரிய வகை மனித குரங்குடன் எடுத்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து சர்ச்சையில் சிக்கினார். அதற்கு காரணம், இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுக்கப்பட்ட காட்டு விலகுங்களை வீட்டில் வளர்ப்பதும், சாட்சிப்படுத்துவதும் வர்த்தம் செய்வதும் கடுமையான குற்றமாகும். அதில் இந்த குரங்கு இனமும் ஒன்று.
இதுகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அதில், லார் கீபன் என்பது இந்தியாவில் இயல்பாக வாழும் உயிரினம் கிடையாது. இவை மலேசியா, இந்தோனேசிய நாட்டின் அடர்ந்த மலைக்காடுகளில் 100 முதல் 150 ஆண்டுகள் வரை பழமையான உயர்ந்த மரங்களின் உச்சியில் வாழும் மனிதக்குரங்காகும். உலகளவில் மிகவும் அழிந்து வரும் உயிரினங்களில் லிஸ்ட்டில் இருக்கிறது.
இயற்கை சூழலில் சுதந்திரமாக உலவ வேண்டிய இவ்வகையான விலங்குகளை நாம் எவ்வளவு வசதியான செயற்கை சூழலில் அடைத்து வைத்தாலும் அதனால் இயல்பாக வாழ முடியாது. மணிப்பூர் எல்லை வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக 3 மனித குரங்குகளில் கடத்தி வரப்பட்டதாக கூறப்படுகிறது.
2 குரங்குகள் ஈரோடு பெருந்துறையிலுள்ள ஒரு தொழிலதிபருக்கும், இன்னொன்று விக்ரமின் சம்மந்தி கெவின் கே சி. கே ரங்கநாதனின் குடும்பத்திற்கும் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஈசிஆர்-ல் உள்ள தன்னுடைய சம்மந்தி வீட்டிற்கு மகளை சென்று பார்க்கும்போது அங்கிருந்த அந்த குரங்குடன் விளையாட்டாக வீடியோ எடுத்து வீடியோவை பதிவிட்டதாகவும் எனக்கு வேறு எதுவும் தெரியாது என்றும் சிக்ரம் கூறினார்.
பின் அக்கரையிலுள்ள பண்ணை விட்டிற்குள் சென்று வனத்துறையினரும், அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டபோது வீட்டின் உரிமையாளர்கள் யாரும் அங்கில்லை. அங்கிருந்த மேனேஜரிடம் விசாரித்தபோது, வியாபாரி ஒருவர் விற்பனைக்காக இந்த குரங்கை கொண்டு வந்தாரே தவிர, நாங்கள் அதை விலைக்கு வாங்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
ஆனால் சர்வதேச சந்தையில் சுமார் ரூ. 33 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை மதிப்பு கொண்ட அரிய உயிரினங்கலை வாங்குவதும் விற்பனை செய்வது சட்டவீரோத வனவிலங்கு வர்த்தப் பிரிவின் கீழ் வரும். கடத்தி வரப்பட்ட 3 குரங்குகளில் ஒன்று இறந்துள்ளதால், இந்த குரங்கு கடத்தி வரப்பட்டது என்று நிரூபித்தால் விக்ரமின் சம்மந்தி கைது செய்யப்படுவார் என்று குறிப்பிடத்தக்கது.