30 வயதாகாமல் உயிரிழந்த இளம் நடிகைகள்!! இதோ அந்த லிஸ்ட்..
30-க்குள் உயிரிழந்த நடிகைகள்
சினிமா நடிகைகளின் உயிரிழப்பு சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், இளம் வயதிலேயே சில நடிகைகள் மரணிப்பது இந்திய சினிமாவையே அதிர வைத்து வருகிறது. சமீபத்தில் நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் 30 வயதைக் கூட எட்டாமல் இளம் வயதில் உயிரிழந்த நடிகைகள் யார் யார் என்று பார்ப்போம்..

பாலிவுட்டில் முன்னணி இளம் நடிகையாக திகழ்ந்த நடிகை ஜியா கான், 2013ல் மும்பை வீட்டில் தற்கொலை செய்து மரணித்தார். அவருக்கு அப்போது 25 வயதுதான்.
பாலிவுட்டில் சிறியகாலத்தில் டாப் நடிகையாக உருவெடுத்த நடிகை திவ்யா பாரதி, தன்னுடைய வீட்டு பால்கனியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 19.

நடிகையும் மாடலுமான நஃபிசா ஜோசப், தொழிலதிபருடன் திருமணத்தை முடிக்கும் நேரத்தில் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு அப்போது வயது 26.
சின்னத்திரை, வெள்ளித்திரையில் நடித்து வந்த நடிகை பிரத்யூஷா பானர்ஜி, தன்னுடைய 24வது வயதில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

14 வயதான நடிகையும் ரஸ்னா விளம்பரத்தின் நடித்து பிரபலமான நடிகை தாருனி சச்தேவ், விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மஹாராஷ்டிராவிலுள்ள தன்னுடைய வீட்டில் பாலிவுட் நடிகை துனிஷா சர்மா, தன்னுடைய 20 வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது நடிகை அனன்யா ராஜ், மனநலம் சார்ந்த பிரச்சனையால் அவதிப்பட்டு ஜூலை 15 ஆம் தேது தூக்கத்திலேயே தன்னுடைய 27 வயதில் மரணமடைந்திருக்கிறார்.