ஓவரா புகழ்ந்து தள்ளிய தொகுப்பாளார்? தள்ளிப்போன்னு தள்ளிவிட்ட அனிருத்..
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் அனிருத். 3 படத்தில் ஆரம்பித்த இசைப்பயணம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் ஜெயிலர் வரை சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து கொடுத்த அனிருத் சமீபத்தில் அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகியுள்ள ஜவான் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.
கமல் ஹாசனின் விக்ரம் படத்திற்கு இசைமைத்தது வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் அனிருத்தை பேச அழைக்க நடிகரும் தொகுப்பாளருமான மிர்ச்சி விஜய் புகழ்ந்து தள்ளி பேசியுள்ளார்.
போதும் எனக்கு புகழ்ச்சி பிடிக்காது என்று நினைத்து கொண்டு மிர்ச்சி விஜய்யை தள்ளியபடி ஓரங்கட்டிவிட்டு மைக்கில் நின்று பேசியுள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ஓவரா புகழ்ந்த Anchor-ஐ ஓரமா தள்ளிவிட்ட அனிருத்... - விக்ரம் வெற்றி விழாவில் கலகல...#Sunnews | #Vikram pic.twitter.com/vbWJYlVPiZ
— Sun News (@sunnewstamil) June 17, 2022