தவறான சிகிச்சையால் படுத்த படுக்கையில் இயக்குனர் விக்ரமன் மனைவி!! தற்போதைய நிலை..

Tamil Cinema
By Yathrika Oct 30, 2023 04:15 PM GMT
Report

இயக்குனர் விக்ரமன்

தமிழ் சினிமாவில் 1990ம் ஆண்டு வெளியான புது வசந்தம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரமன்.

அதன்பின் பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வானத்தைப்போல, பிரியமான தோழி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கினார். கடைசியாக 2014ம் ஆண்டு வெளியான நினைத்தது யாரோ திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இவரது மனைவி ஜெயப்பிரியா தனியார் மருத்துவமனை தவறான அறுவை சிகிச்சை காரணமாக 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கிறார். இவர் குறித்து இயக்குனர் விக்ரமன் ஒரு பேட்டியில் கூற வைரலானது.

தவறான சிகிச்சையால் படுத்த படுக்கையில் இயக்குனர் விக்ரமன் மனைவி!! தற்போதைய நிலை.. | Vikraman Gets Government Help For Wife Treatment

உதவிய அரசு

இந்த செய்தி வைரலாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்துள்ளார்.

இதுகுறித்து விக்ரமன், என் மனைவிக்கு முதுகில் செய்த தவறான அறுவை சிகிச்சையால் அவரால் நடக்க முடியவில்லை, என் நிலைமையை விளக்கி ஒரு பேட்டி கொடுத்தேன்.

திருமணமாகி ஒரு மாசத்துல இப்படியா!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அசோக் செல்வன்

திருமணமாகி ஒரு மாசத்துல இப்படியா!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அசோக் செல்வன்

எனது மனைவி குறித்து தகவல் முதலமைச்சர் காதுக்கு செல்ல அவர் மூலம் உதவி கிடைத்துள்ளது.

25-க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் என் மனைவியை நேரில் வந்து பார்த்து பரிசோதித்து நல்ல சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார்" என்றார்.

தவறான சிகிச்சையால் படுத்த படுக்கையில் இயக்குனர் விக்ரமன் மனைவி!! தற்போதைய நிலை.. | Vikraman Gets Government Help For Wife Treatment