விளம்பரத்தில் மட்டும் இத்தனை கோடியா! கோலி சம்பாதித்த சொத்து மதிப்பு..

Virat Kohli networth2021
By Edward Dec 18, 2021 11:00 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனாக பணியாற்றி வருபவர் விராட் கோலி. சமீபத்தில் உலக கோப்பை டி20 போட்டியை கைநழுவ விராட் தான் காரணம் என்று பிசிசிஐ அவரை கேப்டன் பதவில் இருந்தும் சில போட்டிகளில் இருந்தும் விலக்கியது.

இதுபற்றி பல பிரச்சனைகளை சந்தித்து பேட்டியும் அளித்திருந்தார் விராட். கிரிக்கெட்டை தாண்டி இன்ஸ்டாகிராம் பதிவில் 173 மில்லியன் பாலோவர்ஸ்களை பெற்றிருக்கும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்று வருகிறார் விராட் கோலி.

இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை போடவும் விளம்பரம் செய்யவும் 6 கோடி வரை சம்பளமாக பெறுகிறாராம். அதேபோல் விளம்பரங்களில் நடிக்க அந்த விளம்பரத்தின் தரம் குறித்து சம்பளம் கோடியில் பெற்று வருகிறார்.

இதுவரையில் அவர் விளம்பரங்கள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் வாங்கிய தொகை மட்டும் 840 கோடியாம். மொத்த சொத்து மதிப்பு 950 கோடி ரூபாய் சம்பாரித்துள்ளாராம் விராட்.