இதற்கு மட்டும் வெளியே வந்துள்ளாரே நடிகர் விஜய்யின் மனைவி! இணையத்தில் வைரலாகும் வீடியோ
கார்த்தியின் விருமன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் இன்று பிரம்மாண்ட திரைக்கு வந்துள்ள திரைப்படம் விருமன்.
கொம்பன் திரைப்படத்திற்கு பின் கார்த்தி - முத்தையா கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் விருமன்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை 7 மணியுடன் இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி தொடங்கியது. அப்போதில் இருந்து ரசிகர்கள் இணையத்தில் இப்படம் குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட தொடங்கிவிட்டனர்.
மேலும் தற்போது சென்னையின் பிரபல திரையரங்கிற்கு கார்த்தியின் விருமன் பட FDFS பார்க்க தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை நீங்களே பாருங்கள்
விருமன் படம் பார்க்க வந்த விஜய் மனைவி சங்கீதா!#ThalapathyVijay? #SangeethaVijay #Viruman #Karthi #VirumanFDFS #VirumanFromToday #AditiShankar pic.twitter.com/kQUIXHciTr
— Cineulagam (@cineulagam) August 12, 2022
விருமன் திரைப்படத்தில் விஜய்யின் மாஸ்டர் பட BGM-ன் அப்பட்டமான காப்பி