நிச்சயம் செய்து தூக்கி எறிந்துவிட்டு போன முதல் காதலி! புது காதலில் விழுந்துள்ள விஷால்

Vishal Marriage
By Edward Jul 08, 2022 05:46 AM GMT
Report

தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் நடிகராக திகழ்ந்து திமிரு, சண்டகோழி, தாமிரபரணி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுட்த்ஹு முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் வினோத் குமார் இயக்கத்தில் யுவன் இசையொல் லத்தி என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார்.

ஏற்கனவே ஒருமுறை காலில் காயம் ஏற்பட்டு சில காலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் காயங்களுடன் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார்.

கடந்த பல வருடங்களாக எப்போது திருமணம் என்று பலர் கேட்டு வந்த நிலையில் நான் காதலிக்கிறேன் என்று விஷால் கூறியுள்ளாராம். கடந்த 2019ல் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவரை காதலித்து வந்த விஷால் நிச்சயதார்த்தமும் செய்து முடித்துக்கொண்டார்.

இடையில் எந்த காரணமும் இல்லாம திருமணம் நிறுத்தப்பட்டு அவருடன் எடுத்த புகைப்படங்களை விஷால் டெலீட் செய்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் விஷால் அளித்த பேட்டியொன்றில் தான் பெற்றோர்கள் பார்க்கும் திருமணம் ஒத்துவராது என்பதால் நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். பெண் யார் என்று விரைவில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.