விஜய்யை காப்பி அடித்த விஷால்.. இதுக்கு பேரு என்ன தெரியுமா
By Parthiban.A
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார் விஜய். அவருக்கு மற்ற நடிகர்களே பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதில் விஷாலும் ஒருவர்.
தான் ஒரு விஜய் ரசிகன் என வெளிப்படையாகவே முன்பு கூறி இருக்கிறார் அவர். தற்போது விஜய் செய்த விஷயத்தை அப்படியே அவர் காபி அடித்து இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அந்த விழாவுக்கு விஷால் சைக்கிளில் வந்திருக்கிறார்.
விஜய் ஓட்டு போட சைக்கிளில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை அப்படியே காபி அடித்து இப்படி செய்திருக்கிறார் விஷால்.
வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.