பல கோடி நஷ்டத்தை கொடுத்த விஷால்!! நீதிமன்றம் மூலம் ஆப்பு வைத்த லைக்கா நிறுவனம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் படுதோல்விகளை சந்தித்து வருகிறது. அப்படி சமீபத்தில் லத்தி படம் ஓரளவிற்கு விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றாலும் வசூல் ரீதியாக மோசமான தோல்வியை சந்தித்தது.
மேலும் தன்னுடைய தயாரிப்பின் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார் விஷால். அந்தவகையில் பிரபல தயாரிப்பு நிறுவனமும் விநியோகஸ்தருமான லைக்கா நிறுவனம் இறும்புத் திரை மற்றும் சண்டகோழி 2 படத்தினை விநியோகம் செய்திருந்தது. அதோடு விஷாலின் பிலிம் ஃபேக்ட்ரி நிறுவனம் மூலம் தயாரித்த படங்களுக்காக, லைக்கா நிறுவனம் சுமார் 21.29 கோடியை கடனாக கொடுத்துள்ளது.
பல ஆண்டுகளாக சுமார் 21. 29 கோடி அளவில் லைக்கா நிறுவனத்திற்கு விஷால் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. இதுவரை அந்த தொகையை தராமல் இருந்து வந்த விஷால் மீது லைக்கா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
அந்த வழக்கினை விசாரித்து தற்போது அதற்கான தீர்ப்பை கூறியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். லைக்கா நிறுவனத்திற்கு விஷால் கொடுக்க வேண்டிய 21.29 கோடி ரூபாயில், 15 கோடி ரூபாயை செலுத்த வேண்டும்.
இல்லையென்றால் விஷால் தயாரிப்பு நிறுவனமான பிலிம் ஃபேக்ட்ரி தயாரிக்கும் படங்கள் தியேட்டரிலோ அல்லது ஓடிடி தளத்திலோ வெளியிடக்கூடாது என்ற உத்தரவை போட்டுள்ளனர்.