நடிகர் விஷாலுக்கு இந்த வயதில் மகள் இருக்காங்களா!! மேடையில் கண்ணீர் விட்ட தருணம்..
தமிழில் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஷால் சமீபத்தில் மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டி எமோஷ்னலாக பேசியுள்ளார். தன்னுடைய அம்மா பெயரில் தேவி என்ற அறக்கட்டளை மூலம் படிக்க நினைக்கும் மாணவ மாணிவிகளுக்கு ஸ்பான்சர் செய்து படிக்க வைத்து வருகிறார் விஷால்.
அப்படி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க வைக்கும் கனவை விஷால் நிறைவேற்றி வருகிறார். நிகழ்ச்சியில், இவர் தான் என் மகள் ஆண்டன் மேரி. பிஏ ஆங்கிலம் படிக்க என்னிடம் பாப்பாவின் அப்லிகேஷன் வந்ததும் நான் பார்த்தேன்.
அவரின் கோரிக்கை வித்தியாசமாக இருக்க, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது தான் அவர் ஆசை. அதனால், கல்லூரிக்கு கால் செய்து ஒரு சீட் வேண்டும் என்று கேட்டதும் முடியாது என்று கூறிவிட்டனர். பின் ஒருவழியாக சீட் கொடுக்கிறோம், ஆனால் ஒரு கண்டீசன்.
ஒரு செமெஸ்டர் மட்டும் தான் பார்ப்பேன், நன்றாக படிக்கவில்லை என்றால் அவரை அனுப்பிவிடுவேன் என்று கூறிவிட்டார்கள். பின் என் மகள் வகுப்பில் முதல் ரேங்க் வாங்கினார். அதனால் கல்லூரி தாளாலர் மதர் என்னிடம் அடுத்த ஆண்டு 2 சீட் கொடுப்பதாகவும் கூறினார்கள்.
விஷால் பேசி முடித்தப்பின் ஆண்டன் மேரி பேசுகையில், இது எனக்கு ஒரு கனவு போல் இருக்கிறது என்றும் அம்மா எல்லோருமே என் கனவு நடக்காது என்று கூறினார்கள். கடந்த மாதம் நான் போர்ச்சுகல் போக முக்கால் வாசி செலவு செய்தது முதல் அனைத்திற்கு செலவு செய்தார்கள்.
ஒரு அப்பாவை போல் எனக்கு ஆர் காசு கொடுத்து கைல வெச்சிக்கோ என்று அவர் கூறியதும் விஷால் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இது இணையத்தில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறார் விஷால் மற்றும் அவரது மகள் ஆண்டன் மேரி.