27 வயதான அஜித்தின் ரீல் தங்கச்சியுடன் திருமணம்!! நடிகர் விஷாலில் வருங்கால மனைவி இந்த நடிகையா...
நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின் தான் என்னுடைய திருமணம் என்ற சவாலை விட்ட நடிகர் விஷாலுக்கும் பிரபல அஜித் பட நடிகைக்கும் திருமணம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மலையாள நடிகையாக 15 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை லட்சுமி மேன். கும்கி படத்தில் மூலம் தமிழில் அறிமுகமான லட்சுமி மேனன் நடித்த முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கண்டார்.
அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்தார். இடையில் படிப்பை தொடர்ந்த லட்சுமி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் வாய்ப்பு சரியாக அமையாததால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது சிப்பாய் படத்திலும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் 27 வயதாகும் லட்சுமி மேனன் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மாப்பிள்ளை பிரபல நடிகர் என்றும் அது அவருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் விஷால் என்றும் கூறப்படுகிறது.
இது நடிகர் விஷால் தரப்பில் இருந்து இதெல்லாம் பொய் என்று கூறப்பட்டுள்ளது.