இது நம்ம லிஸ்ட்லயே இல்ல? தியேட்டரில் இதுதான் நடக்குமா விஷால்! வீடியோ

vishal VeerameVaagaiSoodum dimplehayathi praveenaravi
By Edward Jan 16, 2022 06:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஷால் வீரமே வாகைசூட என்ற படத்தில் நடித்து பொங்கல் அன்று வெளியாக காத்திருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுனால் பெரிய படங்கள் தள்ளிவைத்ததை போன்று அவரும் அப்படத்தினை தள்ளிவைத்துள்ளார்.

வரும் குடியரசு தினத்தன்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. சமீபத்தில் அப்படத்தின் டிரைலர் விழாவில் எமோஷனலாகவும் காமெடியாக பேசிய விஷால் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்து நடிகையாகி ரவீனா ரவியை பற்றி பேசியுள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரவீனாவை நான் பரதேசி என்றுதான் கூப்பிடுவேன். என்னைபோல யாரும் தொல்லை கொடுத்தது இல்லை என்று காமெடியாக கூறியுள்ளார்.

இப்படத்தின் பாடல் ஒன்றில் கதாநாயகி டிம்பிளுடன் தியேட்டரில் முத்தகாட்சியில் நடித்துள்ள வீடியோ வெளியானது. இதை பார்த்து தியேட்டரில் இப்படி நடப்பதை நீங்களே படமாக்கலாமா என்று கலாய்த்து வருகிறார்கள்.

நடிகை டிம்பிளுக்கு தற்போது கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.