அந்த போட்டோவ எடுத்து லீக் செஞ்சதே என் பொண்டாட்டி தான்! நிர்வாண புகைப்படம் பற்றி ஓப்பனாக கூறிய நடிகர்..

Vishnu Vishal Gossip Today
By Edward Dec 02, 2022 09:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக மூன்றாம் வரிசை நடிகராக திகழ்ந்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற போராடி வருபவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்ற விஷ்ணு விஷால் இதனை தொடர்ந்து காமெடி கலந்து கமெர்ஷியல் படங்களில் நடித்து வந்தார்.

சமீபத்தில் ராட்சசன், எஃப் ஐ ஆர் போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கட்டா குஸ்தி படத்தில் நடித்து இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறார்.

இந்நிலையில் விஷ்ணு விஷால் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மனைவியுடன் ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வந்த விஷ்ணு விஷால் படுக்கையில் வெறும் போர்வையை போர்த்திக்கொண்டு எடுத்த அரைகுறை ஆடை புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

இந்த புகைப்படம் வைரலாகி விமர்சிக்கப்பட்ட நிலையில் அதை எடுத்ததே என் மனைவி தான் என்று கூறியுள்ளார். பாலிவுட்டில் ரன்வீர் சிங் தன்னுடைய நிர்வாண போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டு ட்ரெண்ட்டாகினார்.

அதை பார்த்த என் மனைவி அவர் மட்டும் போடும் போது நீயேன் போடாமல் இருக்கிறாய் என்று இணையத்தில் மனைவி ஜுவாலா தான் லீக் செய்துவிட்டார் என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.