ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ள ஐஸ்வர்யா அர்ஜுன்.. அப்பா செய்த செயலால் ஓடிப்போன இளம் நடிகர்..

Arjun Gossip Today
By Edward Nov 09, 2022 04:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்தும் ஆக்ஷன் கிங் என்று புகழப்பட்டு வருபவர் நடிகர் அர்ஜுன் சார்ஜா. தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ஜுன் தன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.

ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ள ஐஸ்வர்யா அர்ஜுன்.. அப்பா செய்த செயலால் ஓடிப்போன இளம் நடிகர்.. | Vishwak Sen Replies To Arjun Sarjas Allegations

ஐஸ்வர்யா அர்ஜுன் ரீஎண்ட்ரி

ஆனால் அவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்ததால் வாய்ப்புகளை இழந்து வந்தார். இதனால் மகளை வைத்து ஒரு படத்தினை இயக்கதிட்டமிட்டும் இருந்தார். இதற்காக சென்னை சேர்ந்த தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் அஷ்வக் என்பவரை மகளுக்கு ஜோடியாக கமிட் செய்திருந்தார்.

ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்த நாளில் படத்தில் இருந்து விலகி இருக்கிறார் அஷ்வக். அர்ஜுன் பல முறை கால் செய்தும் எடுக்கவில்லை. இதுகுறித்து அர்ஜுன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, நான் என் வாழ்நாளில் யாருக்கும் அத்தனை முறை கால் செய்தது கிடையாது. ஆனால் அஷ்வக்கிற்கு கால்செய்தும் அவர் எடுக்காமல் இருந்தார்.

ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ள ஐஸ்வர்யா அர்ஜுன்.. அப்பா செய்த செயலால் ஓடிப்போன இளம் நடிகர்.. | Vishwak Sen Replies To Arjun Sarjas Allegations

அஷ்வக்

திரைத்துறையில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்கவும் தயாராக இருந்தோம். அவருக்க் பதில் வேறொரு நடிகரை கமிட் செய்துவிட்டோம் என்று அர்ஜுன் கூறியிருந்தார். இதுகுறித்து அஷ்வக் கூறியதாவது, படத்தில் கமிட்டாகிய போது, முதல் பாதி ஸ்கிரிப்ப்டை ஒருவாரத்திற்கு முன்பு தான் அர்ஜுன் கொடுத்தார்.

40 நாட்கள் ஷூட் 20 நாட்கள் விளம்பரம் என்ற அடிப்படையில் திட்டமிட்டு இருந்த என்னுடைய ஆலோசனையை அர்ஜுன் கேட்கவில்லை. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. நானாக இப்படத்தில் இருந்து விலகவில்லை என்று கூறியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.