முன்னாள் மனைவியால் தற்கொலை செய்ய நினைத்த இமான்!! உண்மையை கூறிய பிரபல பத்திரிக்கையாளர்..
தமிழ் சினிமாவில் கடந்த மாதம் முதல் இணையத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகவும் சினிமா வட்டாரத்தை பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் அமைந்தது இசையமைப்பாளர் இமானின் பேட்டி. சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்ததாகவும் இனிமேல் அவருடன் இணையப்போவதில்லை என்றும் கூறியிருந்தார் இமான்.
இதனை தொடர்ந்து பலர் வாக்குவாதம் செய்து வந்த நிலையில் முன்னாள் மனைவியால் இமான் தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார் என்ற உண்மையை பிரபல பத்திரிக்கையாளர் வித்தகன் தெரிவித்திருக்கிறார்.
மனைவியின் தவறு காரணமாக இரு ஆண்டுகளுக்கு முன் இமான் தற்கொலை செய்து கொள்ள நினைத்திருக்கிறார். இசை மீது அன்பினால் தான் அதை தவர்த்திருக்கிறார்.
பிரபல ஊடகத்திற்கு இமான் கொடுத்த பேட்டி ஸ்கிரிப்ட் என்றும் பேட்டி எடுத்த நெறியாளரிடம் பேசி வைத்து கொடுத்த பேட்டி என்று சிவகார்த்திகேயனிடன் பொட்டி (பணம்) வாங்கிய புழுகுனி பத்திரிக்கையாளர்கள் மனசாட்சி இல்லாமல் கூறியிருக்கிறார்கள்.
எனக்கு தெரிந்தவரை இமான் கொடுத்த பேட்டியில் எமோஷ்னலாக பேசி பேட்டியை நிறுத்தி அதன்பின் தொடர்ந்தார் இமான்.
அவருக்கு படங்களே இல்லை என்று மோனிகா உட்பட பலர் கூறியிருக்கிறார்கள். இமானுக்கு கைவசம் 6 படங்கள் கைவசம் இருக்கிறது என்றும் பேச்சுவார்த்தையும் சில படங்கள் சென்று கொண்டிருக்கிறது.
என் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போக சிவகார்த்திகேயனும் ஒரு காரணமே தான் தவிர அவர் காரணம் இல்லை என்று கூறியிருக்கிறார் இமான். அதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் மகள் எதிர்காலத்திற்காக சிவகார்த்திகேயனும் ஒரு காரணம் என்று கூறிருக்கிறார் வித்தகன் சேகர்.