மறைந்த நடிகர் விவேக்கிற்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்த முன்னணி நடிகர்? இதுதான் நடந்ததாம்

death vivek vijayakanth direct
By Edward Apr 18, 2021 06:12 PM GMT
Edward

Edward

Report

கடந்த வார இறுதியில் இந்திய சினிமாவையே அதிரவைத்த நிகழ்வு காமெடி நடிகர் விவேக்கின் மரணம். கொரானா தடுப்பூசி போட்ட இரு தினங்களுக்கு முன்பே மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் இழப்பால் பல பிரபலங்கள் ரசிகர்கள் இரங்கலை நேரிலும் இணையம் வழியாகவும் ஆறுதல் கூறி வந்து வருகிறார்.

நடிகர் விவேக்குடன் நடிக்க முடியவில்லை என்றும் அவருடன் ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் விவேக்கை பலருக்கும் நடிகராக மட்டும் தான் தெரியும். ஆனால் அவருக்குள் ஒரு இயக்குனர் ஒளிந்து கொண்டிருந்தார் என்பது தற்போது வரை தெரியாமல் அவர் உடனே மறைந்து விட்டது.

  சினிமாவுக்கு வந்த புதிதில் அவருக்கு இயக்குனராக வேண்டும் என்பதுதான் ஆசையாம். மேலும் அப்போது உச்சத்தில் இருந்த பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிய ஆசைப்பட்டு அடிக்கடி அவரை சந்தித்தாராம். ஆனால் அவர் விவேக்கின் சுறுசுறுப்பை பார்த்துவிட்டு அவர் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைத்து நடிப்பு ஆசையை தூண்டி விட்டாராம்.

விவேக் முதன் முதலில் மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில்தான் நடித்தார். இருந்தாலும் விவேக்கிற்குள் இருந்த இயக்குனர் அவ்வப்போது வெளிவர ஒரு சூப்பர் டூப்பர் கமர்சியல் படத்திற்கான கதையை எழுதி வைத்து காத்துக் கொண்டிருந்தாராம்.

மேலும் அந்த படத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க பெரிதும் ஆசைப்பட்டார் என்று அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.